Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

ஆதாரில் திருமணம், விவாகரத்து, சிறிய எழுத்துப் பிழை திருத்தங்களுக்கு : UIDAI புதிய வழிகாட்டு நெறிமுறை

September 25, 2026

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 25
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » காவலர்கள் மற்றும் அதிகாரிகள்மீதான குற்ற வழக்குகள்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

காவலர்கள் மற்றும் அதிகாரிகள்மீதான குற்ற வழக்குகள்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

தினக்கதிர்By தினக்கதிர்September 25, 20261 Min Read116 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவற்றில் எடுக்கப்பட்டுள்ள துறைரீதியான நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த எம். சௌந்தரபாண்டியன், 2022-23ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் பங்கேற்று 86 மதிப்பெண்கள் பெற்றும், தமக்கு எதிரான குற்ற வழக்கை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டதாகக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் பின்னர் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்படுவோரின் குற்றப் பின்னணி தீவிரமாக பரிசீலிக்கப்படும் நிலையில், ஏற்கெனவே பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், குற்ற வழக்குகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கிய காவல் பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பது குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது.

இதையடுத்து, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை, வழக்குகள் நிலுவையில் உள்ள காலம், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை ஆகிய விவரங்களைத் தொகுத்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும், குற்ற வழக்கு நிலுவையில் உள்ள காவல் பணியாளர்களுக்கு எதிரான துறைரீதியான விசாரணை தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அறிக்கையில் தெரிவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#DGP #HighCourt #MaduraiBench #TamilNaduPolice #TamilNews #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“மர்ம காய்ச்சல் என மறைத்தவர்கள் இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்கிறார்கள்” – அமைச்சர் அருண்ராஜ்
Next Article மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

ஆதாரில் திருமணம், விவாகரத்து, சிறிய எழுத்துப் பிழை திருத்தங்களுக்கு : UIDAI புதிய வழிகாட்டு நெறிமுறை

September 25, 2026
Dinakkadir

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026
Dinakkadir

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,987 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,349 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.