தென்காசி நகரப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை முறையாக நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, தமுமுக–மனிதநேய மக்கள் கட்சி தென்காசி நகர நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமுமுக–மனிதநேய மக்கள் கட்சியின் தென்காசி நகர நிர்வாகக் குழுக் கூட்டம், நகரத் தலைவர் அபாபீல் மைதீன் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் களஞ்சியம் பீர், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் ஆதம்பின் ஆஷிக், நகரப் பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர துணைச் செயலாளர்கள் கோயா பீர், அப்துல் ரஹீம், பொன்னானி சேட், முஹம்மது மைதீன், அபூபக்கர் சித்திக், ஹபீப் ரஹ்மான், முகமது வாசிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், MTS நகரச் செயலாளர் ஷேக் அப்துல் காதர், மருத்துவ அணி நகரச் செயலாளர் திவான், சமூக நீதி மாணவர் இயக்க நகரச் செயலாளர் நவ்ஃபல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தென்காசி நகரப் பகுதியில் கடந்த 100 நாள்களாக பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நகராட்சி நிர்வாக அதிகாரிகளை முறையாக வழிநடத்தத் தவறியதாகக் கூறி தவெக அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

