Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.

September 24, 2026

திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

September 24, 2026

சங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

September 24, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, September 24
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

சங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

தினக்கதிர்By தினக்கதிர்September 24, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் நிலங்கள், சங்கரநாராயணசுவாமி கோயிலுக்குச் சொந்தமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக மாற்றிய நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர் மனு அளித்தார்.

மனுவில், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வருவதுடன், விவசாய நிலங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலங்கள் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்குச் சொந்தமானவை என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சார் பதிவாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, வாரிசுகளுக்கு பாகப்பிரிவினை செய்யவோ முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் கிரய ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இந்து சமய அறநிலையத் துறையிடமோ, கோயில் நிர்வாகத்திடமோ இல்லை என்றும், பொதுமக்களிடம் பட்டா, தீர்வை ரசீதுகள் மற்றும் அசல் ஆவணங்கள் தங்களது பெயரில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியமாக மாற்றப்பட்டதை ரத்து செய்து, பொதுமக்களின் நில உரிமை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ கோரியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் திலீபன் ஜெய்சங்கர் கூறியதாவது:

சங்கரநாராயணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதாக கடந்த ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சுமார் 20 கிராமங்களில் வசிக்கும் மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

தங்களது நிலங்களுக்கான முறையான ஆவணங்கள் இருந்தும், அவசரத் தேவைக்காக நிலங்களை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவோ முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் மனு அளித்துள்ளேன்.

மேலும், நீதிமன்றத்திலும் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கோயில் நிலம் என்பதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை சமர்ப்பித்து நிலங்களை மீட்டுக்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், அதிகாரிகள் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் சந்திரன், ஜெ. பேரவை பொருளாளர் பாலாஜி, மானூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலர் மதுரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#Sankarankovil #TamilNaduPolitics #TamilNews #Tenkasi #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதமுமுக–மனிதநேய மக்கள் கட்சி தென்காசி நகர நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தீர்மானம்
Next Article திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

சபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.

September 24, 2026
Dinakkadir

திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

September 24, 2026
Dinakkadir

தமுமுக–மனிதநேய மக்கள் கட்சி தென்காசி நகர நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தீர்மானம்

September 24, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,985 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,348 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.