Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

தமிழக அரசின் நிகரக் கடன் பெறுதல் 5 மாதங்களில் ரூ.7,060 கோடி குறைவு

September 19, 2026

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்

September 19, 2026

இலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

September 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்

தினக்கதிர்By தினக்கதிர்September 19, 20261 Min Read24 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த சட்டத்தின் மூலம், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 0 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதி திரட்டுவதை கட்டுப்படுத்தவும், ரஷ்யாவின் எரிசக்தித் துறை மற்றும் ‘நிழல் கப்பல் படை’ நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்குள் வரி தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொண்டு சில நாடுகளுக்கு விதிவிலக்கு வழங்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியா தெரிவித்துள்ள நிலைப்பாட்டில், “140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முக்கிய நோக்கம். உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எரிசக்தி இறக்குமதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா–இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய சட்டம் சர்வதேச வர்த்தகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#DonaldTrump #GlobalEconomy #RussiaSanctions #TamilNews #Tngovt #USIndiaTrade
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஇலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
Next Article தமிழக அரசின் நிகரக் கடன் பெறுதல் 5 மாதங்களில் ரூ.7,060 கோடி குறைவு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

தமிழக அரசின் நிகரக் கடன் பெறுதல் 5 மாதங்களில் ரூ.7,060 கோடி குறைவு

September 19, 2026
Dinakkadir

இலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

September 19, 2026
Dinakkadir

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கட்டக்குளம் கண்மாயில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு

September 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,096 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,974 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,344 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.