வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு வழங்கப்படாததாகக் கூறி, பதவி உயர்வு கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் 7 பேர் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாக தகுதியுள்ள 7 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அமர்ந்து தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் நேரடி நியமன உதவியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version