பொதுப்பணித்துறை பணிகளில் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என, கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழில்நுட்பச் சுற்றறிக்கையில், எந்தவொரு பணியையும் தொடங்குவதற்கு முன்பாக நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப அனுமதி மற்றும் போதுமான நிதி ஒதுக்கீடு பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் மற்றும் துறை விதிகளின்படி முறையான ஒப்பந்தப்புள்ளி கோரி, தகுதியான ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கிய பின்னரே பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகளின் மதிப்பை குறைக்கும் நோக்கில் அவற்றை பல பகுதிகளாகப் பிரித்து வழங்குதல், பின்தேதியிட்டு அனுமதி அல்லது பணி ஆணை வழங்குதல், பணிகள் முடிந்த பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோருதல் உள்ளிட்ட நடைமுறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை சுற்றறிக்கையில் எச்சரித்துள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version