Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!அச்சச்சோ என்னாச்சு?ரசிகர்கள் பதைபதைப்பு!

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!அச்சச்சோ என்னாச்சு?ரசிகர்கள் பதைபதைப்பு!

Balasubramanian KBy Balasubramanian KAugust 24, 20261 Min Read38 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், ஐரோப்பாவில் நடந்த கார் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கினார். இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது; எனினும் பாதுகாப்பு உபகரணங்களால், காயமின்றி அஜித் தப்பினார்.

தமிழ் திரைப்பட உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். நடிகராக ஜொலிப்பது மட்டுமின்றி, கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார். உள்ளூர் அளவில் அல்ல, உலக அளவில் நடைபெறும் பல்வேறு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில், நடிகர் அஜித்குமாரின் அணி பங்கேற்று வருகிறது. அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசத் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்றது. இதில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறக் காரில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். பந்தயத்தின்போது, அஜித்குமார் இயக்கிய கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

பந்தயத்தில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த அஜித்தின் கார், வளைவில் திரும்பிய போது திடீரென மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித்தின் கார் சக்கரங்கள் செயலிழந்தன; முன் பகுதியும் நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக, காரில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களால் அஜித்குமாருக்கு எவ்விதக் காயமும் இன்றி தப்பினார். எனினும் கார் விபத்து குறித்து தகவ்ல அறிந்தஹ்டும் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கெனவே இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் நடந்த கார் பந்தயப் போட்டிகளில் அஜித் குமார் பங்கேற்றபோது பயிற்சி மற்றும் பந்தயங்களின் சிறு சிறு விபத்து ஏற்பட்டு லேசான காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

—

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#ajith #ajith #CarRace
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்… பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
Next Article தடைகள் தீவிரம்… தகராறு உச்சம்… பொருளாதாரப் போரில் அமெரிக்கா – ஈரான்!
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.