Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது

தினக்கதிர்By தினக்கதிர்July 3, 20262 Mins Read224 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைத்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவர் தவெக அரசு மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

முதலமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

மேலும் சட்டசபையில் முதலமைச்சர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார். முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது.

இதையடுத்து, முன் ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அனிதா முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது இந்த நிலையில், முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்தபோது அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் ஏறி காவல் நிலையத்திற்கு வருவதாக கூறியதை ஏற்க மறுத்த போலீசார் காரில் இருந்து அவரை இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Anitha Radha Krishnan CMVijay DMK MLA MKStalin Tiruchendhur TVK GOVT
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“தொட்டி இருக்கு… ஆனா தண்ணி வராது…!”
Next Article கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார்களை தெரிவிக்கலாம் – அமைச்சர் ரமேஷ்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.