Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர் விசிட்’!அலமாரியில் ரொக்கம்… செல்போனில் ஜி-பே… மொத்தம் ரூ.1.73 கோடி பணப் பரிவர்த்தனை..

September 23, 2026

டிரம்ப் – அமெரிக்க ஊடகங்கள் மோதல் தீவிரம்: ‘டிரம்ப் டிவி’ தொடக்கம்

September 22, 2026

அரசுத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தொண்டு நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும்: ஜெகநாத் மிஸ்ரா

September 22, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, September 23
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தாராபுரத்தில் பரபரப்பு: வீட்டுமனைப் பட்டா கோரி அருந்ததியர் சமூகத்தினர் கண்ணீருடன் தர்ணா போராட்டம்..!

தாராபுரத்தில் பரபரப்பு: வீட்டுமனைப் பட்டா கோரி அருந்ததியர் சமூகத்தினர் கண்ணீருடன் தர்ணா போராட்டம்..!

AdminBy AdminJune 18, 20261 Min Read1,021 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள ஆத்திக்காடுபுதூரில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தினர், தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

‘ஆதித் தமிழர் முன்னேற்றக் கழக’த்தின் மாவட்டச் செயலாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

60 ஆண்டுகாலக் கோரிக்கை:

இது குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:
“தாராபுரம் வட்டம், நந்தவனம்பாளையம் கிராமம், ஆத்திக்காடுபுதூரில் உள்ள சர்வே எண் 750/3A-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றன. நாங்கள் வசிக்கும் வீடுகளுக்குரிய வீட்டு வரி மற்றும் மின்சாரக் கட்டணங்களை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையாகச் செலுத்தி வருகிறோம்.”

பூதான் இயக்க நில விவகாரம்:
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, ‘பூதான்’ (நில தானம்) இயக்கத்தின் மூலம் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு இந்த நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆறு தசாப்தங்களாக அங்கு வசித்தும், பட்டா கோரிப் போராடியும் இதுவரை தங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று குடியிருப்பாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகள்:

  • தற்போது தனிநபர் ஒருவரின் பெயரில் உள்ள பட்டாவை வருவாய்த் துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வரும் 40 அருந்ததியர் குடும்பங்களுக்கும் உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்று தலைமுறைகளாகப் போராடியும் தங்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி, போராட்ட இடத்தில் குடியிருப்பாளர்கள் கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தால் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சில மணிநேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Author

  • Admin
    Admin
#ArundhathiyarPeople #DharnaProtest #LandPattaProtest #RevenueDepartment #SocialJustice #TamilNaduNews #Tarapuram #Tiruppur
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதமிழகத்தில் ‘விசில் புரட்சி’: புதிய அரசின் துணிச்சலான முன்னெடுப்புகளை வெளியிட்ட ஆளுநர் உரை!
Next Article தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு; வருவாய்த் துறையின் அலட்சியமா? உத்துகுளி ​​ஜமாபந்தியில் நுகர்வோர் அமைப்புகள் தீவிர புகார்கள் அளித்தன!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர் விசிட்’!அலமாரியில் ரொக்கம்… செல்போனில் ஜி-பே… மொத்தம் ரூ.1.73 கோடி பணப் பரிவர்த்தனை..

September 23, 2026
Dinakkadir

டிரம்ப் – அமெரிக்க ஊடகங்கள் மோதல் தீவிரம்: ‘டிரம்ப் டிவி’ தொடக்கம்

September 22, 2026
Dinakkadir

அரசுத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தொண்டு நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும்: ஜெகநாத் மிஸ்ரா

September 22, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,985 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,348 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.