ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கு உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்க, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கு எண் CCB Cr.No.174/2025 மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை (SIT) அமைத்து தமிழக காவல் துறை டிஜிபி டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், ஐ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார்.

செப். 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் P.C. தென்மொழி, ஐ.பி.எஸ்., மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், ஐ.பி.எஸ்., டிஜிபி அலுவலக காவல் கண்காணிப்பாளர் J. முத்தரசி, ஐ.பி.எஸ்., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் V.V. கீதாஞ்சலி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு விசாரணைக்குழு, சென்னை பெருநகர காவல் ஆணையரின் மேற்பார்வையில் செயல்படும். விசாரணைக்குத் தேவையான மனிதவளம் மற்றும் பிற வசதிகளை காவல் ஆணையர் வழங்குவார் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version