Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சமத்துவம் போதித்த தலைவர்… சாதிக்க துடிப்போருக்கு உதாரணம்; விஜயகாந்த் பிறந்தநாள் இன்று!

சமத்துவம் போதித்த தலைவர்… சாதிக்க துடிப்போருக்கு உதாரணம்; விஜயகாந்த் பிறந்தநாள் இன்று!

Balasubramanian KBy Balasubramanian KAugust 25, 20262 Mins Read25 ViewsUpdated:August 25, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ் திரையுலகில் தனது கம்பீரமான குரலாலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளாலும் ரசிகர்களைக் கவர்ந்து ‘கேப்டன்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 74ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக வாழ்க்கையைத் தொடங்கி, திரையுலகில் கொடிகட்டிப் பறந்து, பின்னர் தமிழக அரசியலில் பெரும் அலையை உருவாக்கிய அவரது வாழ்க்கைப் பயணம் என்றும் நினைவுகூரத்தக்கது.

மதுரையில் விஜயராஜ் என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், திரைப்பட ஆசையால் சென்னைக்கு வந்தார். 1979-ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவருக்குப் திருப்புமுனையாக அமைந்தது ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் தான். தொடக்கத்தில் பல சவால்களையும் நிராகரிப்புகளையும் சந்தித்த விஜயகாந்த், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

ஊழலுக்கு எதிரான கதாநாயகன், நேர்மையான காவல் அதிகாரி, தேசப்பற்றுமிக்க ராணுவ வீரன் போன்ற கதாபாத்திரங்களில் இவர் நடித்த படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 100-வது படமாக வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் இவருக்கு ‘கேப்டன்’ என்ற நிரந்தரப் பட்டத்தைச் சூட்டியது.

படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் முதல் துப்புரவுத் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு வழங்கும் வழக்கத்தை முதன்முதலில் நடைமுறைப்படுத்தினார். பல புதிய இயக்குநர்களுக்கும், அறிமுக நடிகர்களுக்கும் தன் படங்களின் மூலம் திரையுலக வாய்ப்புகளை வாரி வழங்கினார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதே பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியைத் தொடங்கினார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் சக்திகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தினார்.

2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேமுதிக, 8%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் சக்தியாக மாறியது.

அரசியலிலும் திரையுலகிலும் அவர் காட்டிய கோபமும், அதேவேளையில் வெளிப்படுத்திய கள்ளமில்லா அன்பும் அவரை சாதாரண மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்தன. யாராக இருந்தாலும் நேரில் தேடிவந்தால் வயிறார உணவளிக்கும் குணத்தால் ‘அன்னதானப் பிரபு’ என்றும் போற்றப்பட்டார்.

தடைகளை உடைத்து, தன் சொந்த உழைப்பால் திரையுலகிலும் அரசியலிலும் சிகரம் தொட்ட கேப்டன் விஜயகாந்தின் வாழ்வு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள், தேமுதிக சார்பாக ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து, அங்குள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செய்து வருகின்றனர்.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#CaptainVijayakanth #DMDK #Vijayakanth #கேப்டன் #விஜயகாந்த்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஇன்று பெளம பிரதோஷம்… என்ன சிறப்பு? என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
Next Article சர்க்கரையை தொடர்ந்து வெங்காயம் விலையும் கிடுகிடு…நடுத்தர, ஏழை மக்கள் அதிர்ச்சி!
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.