சைவம், வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவரைக் கைது செய்து வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சைவ, வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி பேசிய கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

