தமிழக வெற்றிக்கழகத்தின் தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, குன்னூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி அமைப்பாளர் அமலா, பொர்ஷியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், இளம் பெண்கள் அணி அமைப்பாளர் ஜெரி தர்மா மற்றும் நிர்வாகிகள், கன்டோன்மென்ட் செயலாளர் கவிதா பாரதியார் மற்றும் நிர்வாகிகள்,

மேற்கு நகர துணைச் செயலாளர் மேரி சந்தியா, ஒன்றிய துணைச் செயலாளர் நந்தினி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் திவ்யா, வர்த்தக அணி அமைப்பாளர் தர்மா, வர்த்தக அணி இணை அமைப்பாளர் சிக்கந்தர் பாஷா, விஜய் அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தாங்கள் தொடக்க விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியதாகவும், தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்காக மக்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version