மணப்பாறையில்
பக்ரீத் பண்டிகையையொட்டி சில மணி நேரங்களில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.50 ஆயிரத்தை நெருங்கிய ஆடுகளின் விலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கிராமங்களிலும் திருவிழா நடைபெற்று வருவதால் ஆயிரக்கணக்கானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தாலும் அதற்கு தகுந்த ஆடுகள் வரத்து இல்லாத நிலையில் ஆடுகளின் விலை உச்சம் பெற்று இருந்தது. குர்பானிக்காக விற்பனையான ஆடுகள் 15 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டின் எடைக்கு ஏற்ப விலை இருந்தாலும் கூட வழக்கத்தை விட ஒரு ஆடு 5 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு விற்பனையானது. பக்ரீத் பண்டிகை மற்றும் திருவிழா காலம் என்பதால் சில மணி நேரங்களில் மட்டும் 3 கோடி ரூபாயை கடந்து ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

Authors

Share.
Leave A Reply

Exit mobile version