தேனி மாவட்டதில் வனத்துறையினர் உதவியோடு அரசு நிலங்களில் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கும் வனத்துறையினர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடாத மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாக விவசாயி பேட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறையில் மலைப்பகுதிகளை ஒட்டி அரசு மற்றும் தனியார் தோட்டங்கள் பல ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது இதில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான தேக்கு மரங்களை மற்றும் உசிலை மரங்கள் உள்ளது

இவற்றை மரம் நபர்கள் வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணவாளன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உசிலை மற்றும் தேக்கு மரங்களை கண்டமனூர் வனச்சரகர் சிவாஜி மற்றும் வன அலுவலர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துவதாக தெரிவித்தார்

தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டினால அபராதம் விதிக்கும் வன துறையினர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்

மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விவசாய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் லஞ்சம் கேட்பதாக வனத்துறையினர் மீது விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட வன அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்

Author

Share.
Leave A Reply

Exit mobile version