நாகப்பட்டினம் மாவட்டம்ஆலத்தூர் ஊராட்சியில் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழி தேவன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாதசாரிகள், பெண்கள், முதியவர்கள், பள்ளி-கல்லூரி சிறப்பு வகுப்பு முடித்து வரும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை ஊராட்சி அலுவலகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பொது மக்கள், தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version