Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026

காவலர்கள் மற்றும் அதிகாரிகள்மீதான குற்ற வழக்குகள்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

September 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 25
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

தினக்கதிர்By தினக்கதிர்September 24, 20261 Min Read29 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திரைப்படத் தணிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படச் சான்றிதழ் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, வன்முறை மற்றும் குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் வகையிலோ, அவற்றை ஊக்குவிக்கும் வகையிலோ திரைப்படக் காட்சிகள் அமைக்கக் கூடாது. குற்றச் செயல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதை துல்லியமாக விளக்கும் வகையிலான காட்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கொடூரமான காட்சிகளை தேவையின்றி இடம்பெறச் செய்யக் கூடாது. குழந்தைகள் வன்முறைக்கு பலியாகும் நபர்களாகவோ, வன்முறையில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது வன்முறையை நேரில் காணும் சாட்சிகளாகவோ சித்தரிப்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் அல்லது கேலி செய்யும் வகையிலான காட்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விலங்குகளுக்கு தேவையற்ற கொடுமை அல்லது துன்பம் ஏற்படுத்தும் காட்சிகளையும் தவிர்க்க வேண்டும்.

திரைப்படங்களில் சட்டவிரோத போதைப்பொருள்களின் பயன்பாடு, நுகர்வு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றால், பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.

“சட்டவிரோத போதைப்பொருள்கள் உடல்நலத்தை அழித்து, சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும். போதைப்பொருள்களுக்கு ‘நோ’ சொல்வோம்” என்ற பொருளிலான சட்டப்பூர்வ எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டை நியாயப்படுத்தும் அல்லது பெருமைப்படுத்தும் வகையிலான காட்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களும், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை பாதிக்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெறக் கூடாது என புதிய வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

திரைப்படங்களில் சமூகப் பொறுப்பை உறுதிப்படுத்துவதுடன், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#CBFC #Cinema #FilmCertification #MovieRules #TamilNews
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு
Next Article சபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026
Dinakkadir

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026
Dinakkadir

காவலர்கள் மற்றும் அதிகாரிகள்மீதான குற்ற வழக்குகள்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

September 25, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,987 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,348 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.