Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.

September 24, 2026

திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

September 24, 2026

சங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

September 24, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, September 24
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர் விசிட்’!அலமாரியில் ரொக்கம்… செல்போனில் ஜி-பே… மொத்தம் ரூ.1.73 கோடி பணப் பரிவர்த்தனை..

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர் விசிட்’!அலமாரியில் ரொக்கம்… செல்போனில் ஜி-பே… மொத்தம் ரூ.1.73 கோடி பணப் பரிவர்த்தனை..

தினக்கதிர்By தினக்கதிர்September 23, 20263 Mins Read290 ViewsUpdated:September 23, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ரூ.13.78 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்; ரூ.1.59 கோடி ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட ஆய்வுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை (செப்.22) நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.13,78,207 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.1,59,70,459 மதிப்பிலான சந்தேகத்துக்குரிய ஜி-பே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

இதன் மூலம் சோதனையில் கண்டறியப்பட்ட ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.1,73,48,666 என லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 இடங்களில் சோதனை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 36 அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னை மாநகரில் மட்டும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெருங்குடி மண்டல அலுவலகத்தில் ரூ.4,260 ரொக்கம் மற்றும் ரூ.43,42,563 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. மாதவரம் மண்டல அலுவலகத்தில் ரூ.2,000 ரொக்கம் மற்றும் ரூ.1,85,550 ஜி-பே பரிவர்த்தனைகளும், ஆலந்தூர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகத்தில் ரூ.27,000 ரொக்கம் மற்றும் ரூ.1,95,000 ஜி-பே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் ரூ.46,000, பல்லாவரம் நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் ரூ.4,820 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.42,180 ரொக்கம் மற்றும் ரூ.8,52,500 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.80,650, வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.2,300 ரொக்கம் மற்றும் ரூ.11,040 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.7,64,500, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.14,56,356, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ரூ.7,70,000 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.4,600 ரொக்கம் மற்றும் ரூ.6,84,221 ஜி-பே பரிவர்த்தனைகளும், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.80,650 ஜி-பே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் ரூ.15,100, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் ரூ.51,000 ரொக்கம் மற்றும் ரூ.4,02,000 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.8,200 ரொக்கம் மற்றும் ரூ.19,16,280 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் ரூ.52,280 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,38,900 ரொக்கம் மற்றும் ரூ.4,68,999 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,54,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.5,750 ரொக்கம் மற்றும் ரூ.3,13,000 ஜி-பே பரிவர்த்தனைகளும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.5,53,767 ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ஜி-பே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

மதுரை மாநகராட்சி பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் ரூ.1,35,000, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.10,500, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.12,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் வார்டு அலுவலகத்தில் ரூ.9,300 ரொக்கம் மற்றும் ரூ.91,500 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16,000 ரொக்கம் மற்றும் ரூ.10,00,200 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.7,500 ரொக்கம் மற்றும் ரூ.19,66,500 ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.

ராமநாதபுரத்தில் போலி ரசீது

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில், அசல் ரசீதுகளுடன் சேர்த்து ரூ.20 மதிப்பிலான போலி வாகன நிறுத்த ரசீதுகள் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 100 ரசீதுகள் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்களும், கணக்கில் வராத ரூ.12,750 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையில் கண்டறியப்பட்ட பணம் மற்றும் ஜி-பே பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AntiCorruption #DAVC #TamilNaduNews #TamilNews #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleடிரம்ப் – அமெரிக்க ஊடகங்கள் மோதல் தீவிரம்: ‘டிரம்ப் டிவி’ தொடக்கம்
Next Article லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்க ‘கேட்பு’–‘பெறுதல்’ ஆதாரம் அவசியம்: வெறும் பணம் பறிமுதல் போதாது!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

சபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.

September 24, 2026
Dinakkadir

திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதல்களில் மாற்றம்: போதைப்பொருள் காட்சிகளுக்கு எச்சரிக்கை கட்டாயம்

September 24, 2026
Dinakkadir

சங்கரன்கோவில் கோயில் நிலங்கள் சர்ச்சை: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

September 24, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,985 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,348 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.