தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான புகார்கள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள், விவசாயிகள், கூட்டுறவு வாடிக்கையாளர்கள் மற்றும் துறைப் பணியாளர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம்.

இந்த வாட்ஸ்அப் எண்ணை அனைத்து மண்டல மற்றும் சரக அலுவலகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், நியாய விலைக் கடைகளின் தகவல் பலகைகளில் பெரிய எழுத்துகளில் காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் மனுக்கள் e-Office தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர் அல்லது கள அலுவலர் மூலம் மனுக்கள் பரிசீலிக்கப்படும். இரண்டாவது வெள்ளிக்கிழமை வட்டார அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மீது துணைப் பதிவாளர்கள் நடவடிக்கை எடுப்பர்.

மூன்றாவது வெள்ளிக்கிழமை நிலுவையில் உள்ள மனுக்களை மண்டல இணைப் பதிவாளர்கள் ஆய்வு செய்து தீர்வு காண்பர். நான்காவது வாரத்தில் மாவட்ட அளவில் மண்டல அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பதிவாளர் தலைமையில் மண்டல அலுவலர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மனுக்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.

இதன் மூலம் கூட்டுறவுத் துறை தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு காலவரையறைக்குள் தீர்வு காணும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version