தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கீழ் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புதிய சீருடை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடை விவரங்களின்படி, டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் லைட் புளூ நிற சட்டை மற்றும் நேவி புளூ நிற பேண்ட் அணிய வேண்டும்.

அதேபோல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பீஜ் நிற சட்டை மற்றும் டார்க் கிரே அல்லது டார்க் புளூ நிற பேண்ட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பணியாளர்களின் சீருடையிலும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் லோகோ இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் 3 செட் புதிய சீருடைகளை வாங்கிக் கொள்வதற்காக, ஒரு செட்டுக்கு ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே மாதிரியான சீருடையில் பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version