தமிழக முதல்வர் விஜய் துபை சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் யுஏஇ547 (UAE547) விமானத்தை, விமான கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட் ரேடார் (Flightradar) தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கண்காணித்துள்ளனர்.
இதன் காரணமாக, அந்த விமானம் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களால் ஒரே நேரத்தில் டிராக் செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜயின் துபை பயணம் தொடர்பான ஆர்வம் காரணமாகவே இந்த அளவுக்கு அதிகமானோர் அந்த விமானத்தின் பயண நிலவரத்தை கண்காணித்ததாக கூறப்படுகிறது.


