காலணிகள், விளையாட்டு காலணிகள், செருப்புகள் மற்றும் ஸ்லிப்பர்கள் ஆகியவற்றுக்கான தரநிலைகள் குறித்து காலணி உற்பத்தித் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் மந்தன்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் BIS சென்னை கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காலணி உற்பத்தியாளர்கள், சோதனை ஆய்வக பிரதிநிதிகள், தர உறுதி தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    விளையாட்டு காலணிகள், செருப்புகள், ஸ்லிப்பர்கள் தொடர்பான வரைவு தரநிலை திருத்தங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    காலணி தயாரிப்புகளில் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேசிய BIS சென்னை கிளை விஞ்ஞானி மற்றும் இயக்குநர் முனிநாராயணா, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தரநிலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    மேலும், BIS சென்னை கிளை விஞ்ஞானி மற்றும் துணை இயக்குநர் பக்கி பாலு, காலணிகளின் தரம், செயல்திறன், வடிவமைப்பு, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

    நிறைவில் நடைபெற்ற கருத்துப் பகிர்வு அமர்வில், தொழில்துறையினர் BIS அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இந்திய தரநிலைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

    காலணி உற்பத்தித் துறையில் தரமான தயாரிப்புகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்தது.

    Author

    • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

    Share.

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

    Leave A Reply

    Exit mobile version