ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வி.என்.கே. வணிக வளாகத்தில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடாரின் மகன் டாக்டர் ஆர்.சசிக்குமாரின் ‘மகிழ் மருத்துவமனை’ திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

 வி.என்.கே. வணிக வளாக உரிமையாளர் வி.என்.குப்புராஜ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு,குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை முறைப்படி திறந்து வைத்தார்.

நவீன மருத்துவ வசதிகள்:
இப்பகுதி பொதுமக்களின் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையில், வெளி நோயாளிகள் பிரிவு (OP) மற்றும் உள் நோயாளிகள் பிரிவு (IP) ஆகியவை அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேர மருந்தகம், எக்ஸ்ரே (X-Ray), ஈசிஜி (ECG), நவீன ரத்தப் பரிசோதனை நிலையம் மற்றும் பிஸியோதரபி (இயல்முறை மருத்துவம்) உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு செயல்பட உள்ளன.

முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து:
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் MLA, முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.சுப்பிரமணியம், வானிப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் சிவராஜ், ஈரோடு சட்டக் கல்லூரியின் துணைத் தலைவர் காயத்ரி சிந்து ரவி, நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி மற்றும் சோளி சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 மேலும், பங்களாபுதூர் காவல்துறை ஆய்வாளர்,அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 முன்னதாக, மகிழ் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் மருத்துவமனை மருத்துவர்களான டாக்டர் ஆர்.சசிக்குமார் MBBS.,MS (Ortho), டாக்டர் கீர்த்தி சசிக்குமார் MBBS., (MD),டாக்டர் ஆர்.அபிநயா MBBS மற்றும் என்.ராஜேந்திரன் B.Sc – சீதா குடும்பத்தினர், நடேசன் – சரஸ்வதி குடும்பத்தினர் ஆகியோர் அன்போடு வரவேற்று உபசரித்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version