பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் நூற்றாண்டு பழமையான பள்ளிவாசல் புனரமைக்கபட்டு திறப்பு விழா – சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹிந்து மக்கள்கள் சீர்வரிசையுடன் சென்று திறப்பு விழாவில் பங்கேற்ற இந்து மதத்தினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் நூற்றாண்டு பழமையான பள்ளிவாசல் உள்ளது. இந்த நிலையில் பள்ளிவாசலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று திறப்பு விழா காணப்பட்டது .

தேவதானப்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் அவ்வப்போது இந்துக்கள் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்பதும் இஸ்லாமியர்களின் பண்டிகையில் இந்துக்கள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.
அந்த வகையில் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு தேவதானப்பட்டி தெற்கு தெருவை ஹிந்து பொதுமக்கள் சார்பாக சமூக நல்லிணக்கத்தை விரும்பும் வகையில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்
மேலும் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த இந்து பொதுமக்களை பள்ளிவாசல் நுழைவாயில் பகுதியில் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் வரவேற்று அழைத்துச் சென்று மரியாதை செலுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர்
இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் தேனி மாவட்ட அரசு காஜி எஸ்.அப்துல் அகமது பார்கவி, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகிகள் , தேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட கிளை சேர்ந்த பள்ளிவாசல் இமாம்கள் , இறையியல் கல்லூரி முதல்வர்கள் , அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் , இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இளைஞர்கள் , முஸ்லிம் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்