நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலங்குடியில் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். இந்த ஆண்டின் வைகாசி திருவிழா கடந்த 15 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா காட்சிகள் நடைப்பெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. இதில் விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா காட்சி நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவினை ஆலங்குடி கிராமவாசிகள், சிம்லா பண்ணை , சுபாஷ் சந்திர போஸ் கபடி குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version