தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தாமல் நிராகரித்ததாகப் புகார்!

தாசில்தார் செல்போனைப் பறித்ததாகவும் குற்றச்சாட்டு – மாவட்ட ஆட்சியர், துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் அருண்குமார், தனது நிலம் தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பிய மனு மீது உரிய விசாரணை நடத்தாமல் நிராகரித்துவிட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர், வேடசந்தூர் வட்டாட்சியர், தலைமை நில அளவையர் மற்றும் அதே பிரிவில் பணியாற்றும் சசிகலா ஆகியோர் மனு தொடர்பாக முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுத்ததாக அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேசிய அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியரும், துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஒரு விஜய் இல்லை, 100 விஜய் வந்தாலும், இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது வேடசந்தூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தனது செல்போனைப் பறித்ததாகவும் அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version