மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வ.வெ. சாய்பிரணீத், இ.கா.ப., திருச்சிராப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெ. ராமன், விழுப்புரம் காவல் உதவி ஆய்வாளர் க. சண்முகம், கடலூர் தலைமைக் காவலர் எ. கருணாகரன் (எண்: 1674), கள்ளக்குறிச்சி தலைமைக் காவலர் பெ. செல்வம் (எண்: 381) ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் இவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

வரும் 2027 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ₹40,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version