தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுடன் இணைந்து உணவுக் கூடங்கள் (Food Stalls/Mess) நடத்த அனுமதி வழங்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்களின் தூய்மை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மதுபான விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டமும் விரைவில் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்கள் நடத்துவதற்கான விதிமுறைகள், உரிமம் பெறும் நடைமுறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


