தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் இரத்ததான முகாம்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, கோனேரிராஜபுரம் சிவனாரகரம் ஊராட்சியில் பிரம்மாண்ட இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) செயலாளர் கௌதம் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
இந்த இரத்ததான முகாமிற்குச் சிறப்பு அழைப்பாளர்களாக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, முகாமினை முறைப்படி துவக்கி வைத்தனர்.
மேலும், இந்நிகழ்வில் ஊராட்சி செயலாளர்கள் அஜித்குமார், வினோத் மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது குருதியை கொடையாக வழங்கினர்.