மதுரை மாவட்டம் சோழவந்தானில் தானம் அறக்கட்டளை, வட்டாரக் களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை சார்பில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிதி, மண்டல கணக்காளர் கந்தசாமி, மண்டல சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன்,அரவிந்த் கண் மருத்துவமனை யின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக வழிநடத்தினர்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை, கண் அழுத்தப் பரிசோதனை, பார்வைத்திறன் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள பெற்றனர். மேலும், தரமான கண்கண்ணாடிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற்றனர்.

கிராமப்புற மக்களுக்கு தரமான கண் சிகிச்சை சேவைகளை அணுகக்கூடிய வகையில் இம்முகாம் பயனுள்ளதாக அமைந்தது. முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் ஏற்பாட்டாளர்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version