நாகை அருகே ஆடு திருடியவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உரிமையாளர்கள் மீது, காவல்துறையினர் திருப்பி வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொடர் ஆடு திருடன் கருணைக்குமார் என்பவரை, ஆவராணி பகுதியில் பொதுமக்கள் கைகளுமாகப் பிடித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அன்று இரவு சில நபர்களுடன் திருடனை அனுப்பி வைத்த போலீசார், மறுநாள் அவர் மீது பெயரளவில் வழக்கு பதிந்துவிட்டு, திருடனைப் பிடித்துக் கொடுத்த புகார்தாரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புகார்தாரர்கள் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசுக்கு மக்கள் மத்தியில் திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்த காவல்துறை முயல்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ்நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கத்தினர், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, காவல் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

