திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாலையில் உள்ள வாழைக்காய்பட்டி பிரிவு பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள மின்கம்பம் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் முழுமையாகப் பெயர்ந்து, உள்ளே உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதனால், மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உயிரிழப்பு அல்லது பெரும் விபத்து ஏற்படும் முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிப் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்வாரியம் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்குமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version