தில்லியிலிருந்து வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.750 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, சென்னை பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், ‘அமிர்த் பாரத்’ திட்டத்தின் கீழ் பயணியர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல், பழனி மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் ஆகிய 5 ரயில் நிலையங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளையும் பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒருங்கிணைக்கும் வகையில், பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version