தமிழகத்தில் முதல்முறையாக தடுப்புகள் இல்லாத மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை, செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகியவற்றின் முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும், தடுப்புகள் முன் காத்திருப்பதும் தவிர்க்கப்படுகிறது. வாகனங்கள் தொடர்ந்து செல்லும் வகையில் சுங்க வசூல் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ANPR கேமரா: வாகனங்களின் பதிவு எண்களை தானாகக் கண்டறிந்து பதிவு செய்யும் ANPR (Automatic Number Plate Recognition) தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பதிவு எண்ணுடன் தொடர்புடைய FASTag கணக்கின் மூலம் சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கப்படுகிறது.

பரனூர் சுங்கச்சாவடி வழியாக நாளொன்றுக்கு சுமார் 46,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. வார இறுதி மற்றும் பண்டிகை நாள்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க இந்தத் தடையற்ற சுங்க வசூல் முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படுவதால் ஏற்படும் எரிபொருள் விரயம், காத்திருப்பு நேரம் மற்றும் காற்று மாசுபாடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் MLFF முறையை விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான GNSS சுங்கக் கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version