அடுத்த 2 வருடங்களில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும் என்று, வாடிப்பட்டி பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மந்தை திடலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தி அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், “திமுக ஒரு தீய சக்தி. அந்தக் கட்சியை ஒழிப்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன், திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

நிர்மல்குமார் மேலும் பேசும்போது, “அடுத்த இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் பலர் அரசியலை விட்டே விலகிவிடுவார்கள். அவர்களின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, அங்குள்ள அறைகளை வாடகைக்கு விட வேண்டிய நிலை உருவாகும்” என்று குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் அரசு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version