தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) புதிய உறுப்பினர்கள் இணையும் விழா மற்றும் ‘ஹமீத் கன்ஸ்ட்ரக்ஷன்’ (HAMEED CONSTRUCTION) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) மாலை 5:00 மணியளவில் கம்பம் 60 அடி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஹமீது அன்சாரி தலைமை தாங்கினார்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில், ஹமீது அன்சாரியின் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உறுப்பினர்கள் இணைப்பைத் தொடர்ந்து, ‘ஹமீத் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கூடலூர் செல்வேந்திரன், சுப்ரமணிய ஐயர், அபுதாஹிர் மற்றும் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version