சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நத்தம் பிலோ கார்மெண்ட்ஸ் (Pillow Garments) பணியாளர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி மற்றும் உடல் நலம் குறித்த ஆலோசனை முகாம் இன்று (12-06-2026) நடைபெற்றது.

சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நடைபெற்ற இந்த முகாமில், கார்மெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 50 பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இம்முகாமில், சிறுகுடி யோகா மருத்துவர் டாக்டர் தேவராஜ் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு யோகா பயிற்சிகளை அளித்து சிறப்பித்தார். மேலும், நத்தம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் மலைச்சாமி அவர்கள் கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு சித்த மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version