சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு கோடை விழாவில் இலவச முகாம் நடத்த கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மாதவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 12 ஆண்டு காலமாக ஏற்காடு கோடை விழாவில் சேலம் மாவட்ட டூ வீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் கோடை விழாவிற்காக ஏற்காட்டிற்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு பழுதுபார்ப்பு செய்து வருகிறோம்.
இந்த வருடமும் அடுத்த மாதம் இன்னும் ஓரிரு வாரங்களில் கோடை விழா நடைபெற உள்ளது. ஆகவே இந்த வருடமும் இலவச இரண்டு சக்கர வாகன சரிபார்ப்பு முகாம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜன் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் துணைத் தலைவர்கள் விஜய் தியாகராஜன் பிரதாப் பிரதாப் குமார் ஜூல்பிகார் அலி பாபு பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
